பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. 829 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில் நேர்காணல் நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனும் ஒருவர். அவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தை பிடித்துள்ளார்.
25 வயதாகும் ஸ்ருதன் ஜெய் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்று முயற்சித்துள்ளார். முதல் முறை எழுதிய தேர்வில் பின்னடைவை சந்தித்தாலும் இரண்டாவது முறை எழுதி வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார். சங்கர் அகாடமியில் இதற்கான பயிற்சி பெற்று அவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி அடைந்துள்ளார் என்று அவரின் தந்தை சின்னிஜெயந்த் புதிய தலைமுறைக்கு கூறியுள்ளார்.
மேலும் சினிமா குடும்பத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெர் சுதன் ஜெய் நாராயணனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!