இது அபாயம்.. செல்போனில் மூழ்கும் குழந்தைகள் குறித்து எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பொதுமுடக்கம், பள்ளிகள் விடுமுறை ஆகிய காரணங்களால் வீட்டிலுள்ள குழந்தைகள் எப்போதும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் செல்லமாக நாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் செல்போன், அவர்களின் வாழ்க்கையையே சீரழிக்கும் வல்லமை கொண்டது என்று எச்சரிக்கின்றனர் குழந்தைகள்நல மருத்துவர்கள்.


Advertisement

image

பல மணி நேரம் உட்கார்ந்தபடி செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. விளையாட்டுகளில் ஈடுபடாமல் தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகளின் செயல்திறனை முடக்குகிறது.  மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே  அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து  உடல் பெறும்  அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவையும்  வந்து விடுகிறது. ஒளிரும் திரையை பல மணி நேரம் குழந்தைகள்  பார்ப்பதால் அவர்களுக்கு பல் கண்பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் உருவாகிறது. முக்கியமாக தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கியிருப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறனும் பாதிக்கிறது.  மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் இக்குழந்தைகள் தனிமைப்பட்டு விடுகின்றனர்.  செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.


Advertisement

image

செல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மழலை வகுப்பில் சேரும்போதே உடல் இயக்க செயல்பாட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் இரண்டு முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போனை,  தினமும் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பார்த்தால் அவர்களின் உடல் வளர்ச்சியும், உடல் இயக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. 5 வயதுக்குள் சுறுசுறுப்பு தன்மை குறைந்து போய்விடுவதும், பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர்களது உடல் இயக்க திறனில் பாதிப்பு வெளிப்படுவதும் தெரியவந்துள்ளது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement