ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முன் இதை கவனியுங்க!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரடியாகக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினாலும், பலர் ஆன்லைனில் வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது ஒரு வழியில் மக்களின் சிரமங்களைக் குறைத்தாலும், தரம் சார்ந்த பிரச்னையை மக்கள் சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது. அங்கீகரிக்கபட்ட இணையதளத்தை விட்டுவிட்டு மிகக் குறைந்த விலையில் எங்குக் கிடைக்கிறது என அதன் பக்கம் மக்கள் அலைமோதுவது தான் இந்த பிரச்னைக்குக் காரணம். இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றாலாம்.


Advertisement

ஒரிஜினல் போன்ற ட்யூப்ளிகேட்

நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், ‘லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பதை இணையத்தில் நம்பத்தக்க பக்கங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள். அச்சு அசல் அதே போல் இருந்தாலும் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் புதிதாக வெளியான ஒரு பொருளை அதிகத் தள்ளுபடிக்குத் தருகிறார்கள் என்றால் அதுவும் போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அப்படி அது ஒரிஜினல் மாடல் என்றால் கூட காலாவதியாகி விட்டால் அதை விற்றுத்தீர்க்கத் தள்ளுபடி அளிக்கப்படலாம். ஆனால் அரிதாகத்தான் இப்படி நடக்கும். ஆக, ‘ஆன்லைன் ஷாப்பிங்’கில் அதிக கவனத்துடன் ஈடுபட வேண்டும். ‘அதிரடி தள்ளுபடி’ என்றாலே உஷாராகிவிடுங்கள்.


Advertisement

image

கேஷ் ஆன் டெலிவரி

பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங்கின் போது கேஷ் ஆன் டெலிவரி வசதியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. பொருள்களைச் சரிபார்த்து பின் பணம் செலுத்துவது நன்று. இணையதளத்தில் பொருட்களை வாங்கியதும் அதை உறுதிப்படுத்த உங்களது மெயில் முகவரிக்கோ, மொபைலுக்கோ தகவல் அனுப்பப்படும். அந்த தகவலைப் பொருள் கைக்கு வரும்வரை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம்.  விலை உயர்ந்த மின்சாதன பொருள்களை வாங்கும்முன் துறை சார்ந்தவர்களிடம் இந்த ஆன்லைன் தளத்தில் வாங்கலாமா என்று விசாரித்தபின் வாங்குவது நல்லது.


Advertisement

image

கவனம் தேவை

  • அவசர கதியில் ஆர்டர் செய்வது பெரும்தவறு. எப்போதுமே ஆர்டர் செய்யும்போது “assured” என்ற முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • தின்பண்டங்களையும் குளிர்பானங்களையும் ஆர்டர்செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.
  • மின்சாதன பொருள்களை 15 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் பதிவு செய்த நொடியிலிருந்தே அந்த கால அவகாசம் தொடங்கிவிடும். உங்களிடம் வந்து சேர்ந்த நாளில் இருந்து துவங்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஆர்டர் செய்யும்போது பிற வாடிக்கையாளர்கள் என்ன கருத்து பதிவிட்டுள்ளனர் என்பதை பார்ப்பது நல்லது. அதே போல் ரேட்டிங் பார்ப்பது அவசியம்.
loading...

Advertisement

Advertisement

Advertisement