கடைசியாக சுஷாந்த் சிங் கூகுளில் தேடியது இது தான் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், தான் இறப்பதற்கு முன்னர் தனது பெயரையும், உயிரிழந்த தனது முன்னாள் மேனேஜர் திஷா சலியனின் பெயரையும் கூகுளில் தேடியதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், மும்பை காவல்துறையினரும், பீகார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் லேப்டாப் மற்றும் செல்போனை ஆய்வு செய்த மும்பை காவல்துறையினர், இறப்பதற்கு முன் கூகுளில் தனது பெயரையும், மேனேஜர் திஷா சலியனின் பெயரையும் தேடியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

இதனிடையே நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவரது தந்தை கே.கே சிங், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக நிதிஷ் குமாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய கே.கே சிங், சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாகவும், அவரது தோழி ரியா சக்ரவர்த்தி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் தங்களுக்கு போதிய நம்பிக்கை ஏற்படவில்லை என்று கூறினார். தனது மகன் மரணமடைந்து சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும், மும்பை காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என நிதிஷ் குமாரிடம் கே.கே சிங் முறையிட்டார். நிதாந்த் சிங் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மும்பை காவல்துறை ஆணையர், கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட போது எவ்வித குறைபாட்டையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

image

இதன் தொடர்ச்சியாக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே சிங்கை தொடர்புகொண்டு பேசிய பீகார் டிஜிபி, சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறினார். இதனையேற்று சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தால்‌ கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் மற்றும் மும்பை காவல்துறையினரிட‌யே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது பீகார் மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.


Advertisement

ஃபேஸ்புக் பழக்கம் : சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று வன்கொடுமை செய்த இளைஞர்

loading...

Advertisement

Advertisement

Advertisement