யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி

Rahul-Modi-ranks-420-in-UPSC-Civil-Services-Exam

கடந்த செப்டம்பரில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட சுமார் 829 இடங்களுக்கு அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி இன்று வெளியிட்டுள்ளது.


Advertisement

image

வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளி வந்தால் முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களின் பெயரை குறித்து தான் எல்லோரும் பேசுவார்கள். ஆனால் இன்று வெளியான முடிவில் 420-வது இடத்தை பிடித்த நபர் நெட்டிசன்களால் வைரலாக பேசப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் அவரது பெயர். 


Advertisement

இந்திய அரசியலில் எதிரெதிர் துருவமான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்களை கலவையாக அந்த நபர் கொண்டுள்ளது தான் காரணம். அவரது பெயர் ‘ராகுல் மோடி’.

image

தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ராகுல் மோடியின் ரோல் எண் 6312980. 


Advertisement

ஹிந்தி நடிகர் சைஃப் அலி கான் நடித்த படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ‘ராகுல் மோடி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement