கொரோனா நோய்த்தொற்று இல்லாத திண்டுக்கல் ஈ.பி.காலனி.. அரசின் உத்தரவை மதித்து அசத்தும் மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியுங்கள். கைகளை சோப்புபோட்டு கழுவுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மக்கள் அதை சரிவர கடைபிடிப்பதாக தெரியவில்லை. அதனால் தமிழகத்தல் நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது.


Advertisement

image
ஆனால் திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து கொரோனா தடுப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். மின்வாரிய குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கதலைவர் கலீல் ரஹ்மானிடம் பேசினோம்.

ஏற்கெனவே எங்கள் காலணியில் திருட்டுபயம் அதிகமாக இருந்தது. இதனால் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி 13 சிசிடிவி கேமராக்களை அமைத்ததோடு பாதுகாப்புக்காக செக்யூரிட்டி அதிகாரிகளையும் நியமித்துள்ளோம். அன்று முதல் திருட்டு பயம் குறைந்திருக்கிறது.


Advertisement

image
அதேபோல எங்கள் காலனியில் கொரோனா நோய்த்தொற்று இல்லாமல் இருந்தது. அதன்பிறகு இருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இந்த நோய் எப்படி யார்மூலமாக எங்கள் காலனிக்குள் வந்ததென்று தெரியாமல் இருந்தது. மேலும் எங்கள் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க எங்கள் காலனியில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதேபோல மூன்று தெருக்கள் உள்ள எங்கள் காலனிக்குள் வந்துபோக இரண்டு பாதைககள் மட்டுமே இருக்கும். இந்த கொரோனா காலத்தில் ஒருபாதையை முற்றிலுமாக அடைத்துவிட்டு ஒருபாதையை மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த பாதைவழியாக வரும் வெளியாட்கள் அதாவது காய்கறி வியாபாரிகள் துப்புறவு தொழிலாளர்கள் பால்காரர்கள் பேப்பர் பாய்ஸ் என யார் வந்தாலும் அவர்களை முழுமையான சோதித்த பின்பே காலனிக்குள் அனுமதிக்கிறோம்.

image
காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை செய்கிறோம். அதன்பிறகு சானிடைசர் கொடுத்து கைகளை கழுவச்சொல்கிறோம். மாஸ்க் அணியாமல் வந்தால் அவர்களுக்கு மாஸ்க்கும் கொடுக்கிறோம். எங்கள் காலனியில் வசிக்கும் மக்களின் உதவியோடு அரசின் உத்தரவுகளை முற்றிலுமாக மதித்து செயல்படுவதால் கொரோனா நோய்த்தொற்று இல்லாத காலனியாக இருக்கிறது ஈ.பி.காலனி.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement