[X] Close

மழைக்கால சளி Vs. கொரோனா இருமல்: எப்படி கண்டறிவது? - மருத்துவர் விளக்கம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மழைக்கால சளி பிரச்னைக்கும், கொரோனா தொற்று சளி பிரச்னைக்கும் என்ன வித்தியாசம்? எப்படி கண்டறிவது?  என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா 


Advertisement

image''தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டபடியால்  மழைக்காலத்தில் வரும் குளிர்கால சளியும் மக்களுக்கு அதிகம் வர ஆரம்பிக்கும். இதை "COMMON COLD" அல்லது " FLU" என்று அழைப்போம்.  இவ்வகை சாதாரண ப்ளூவுக்கும் கொரோனா தொற்றுக்கும் எப்படி வித்தியாசம் கண்டறிவது என்பதைப் பார்ப்போம்.

சாதாரண குளிர் காலத்தொற்று என்பது காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி என்று தொடங்கி அதிகபட்சமாக ஏழு நாட்களில் முழுமையாக குணமாகிவிடும்.


Advertisement

கொரோனா தொற்றில் காய்ச்சல் , உடல் வலி, அசதி /சோர்வு என்று ஆரம்பமாகி நுகர்தல் திறன் இழப்பு , சுவைத்தல் திறன் இழப்பு, வயிற்றுப்போக்கு போன்றவையும் தென்படலாம். பிரச்சனைக்குரிய கொரோனா தொற்றானது முதல் வாரத்தில் குணமாகாமல், முதல் வார இறுதியில் தான் இருமல் அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா தொற்றில் முக்கியமான காலம் என்பது அறிகுறி போன்று ஆரம்பித்து 8 முதல் 14 நாட்களை உள்ளடக்கிய இரண்டாவது வாரமே ஆகும்.

முதல் மூன்று நாட்கள் காய்ச்சல்/தொண்டை வலி/உடல் சோர்வு பிறகு இருமல் என்று தோன்றி ஒரு வாரத்திற்கு மேல் பிரச்சனை இருந்தால் நாம் கொரோனா குறித்து சந்தேகம் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.


Advertisement

குளிர்கால ப்ளூவும் கொரோனாவும் ஒன்றோடு ஒன்று அறிகுறிகளில் ஒத்துப்போவதால் காய்ச்சல்- இருமல் - மூச்சு விடுவதில் சிரமம் இவை மூன்றும் தென்பட்டால் உடனே கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்வது சாலச்சிறந்தது

இதே கார்காலப் பருவதத்தில் தமிழகத்தை தாக்கும் மற்றொரு கொள்ளை நோய் "டெங்கு" எனும் கொசுவால் பரவும் நோயாகும்.

டெங்குவின் அறிகுறிகள் பின்வருமாறு.

* முதல் மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சல் (101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல்) அடிக்கும்.
* மூட்டுக்கு மூட்டு கடமையான வலி இருக்கும்.
* ஆனால் நான்காவது நாளில் இருந்து காய்ச்சல் திடீரென்று குணமாகி பாதங்களும் உள்ளங்கையும் குளுமையாகிவிடும்.
* ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டை சீர்குலைப்பதால் ஈர்களில் இருந்து ரத்தக்கசிவு, மலத்தில் ரத்தம் கலந்து கருப்பாகச்செல்வது , வயிறு வலிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
* உடல் முழுவதும் செம்படை தோன்றலாம்.
* முதல் மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சல் அடித்து திடீரென்று காய்ச்சல் விட்டு உடல் குளிர்ந்தால் உடனே டெங்கு குறித்தும் அலர்ட் ஆக வேண்டும் .

மொத்தத்தில் காய்ச்சல் அறிகுறி தோன்றினால் நாம் எச்சரிக்கையாக இருந்து உடனே மருத்துவரைச் சந்தித்தால் சேதத்தை தவிர்க்க முடியும்

loading...

Advertisement

Advertisement

Advertisement