கணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேசத்தில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இறந்த நிலையில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களை காவல்துறையினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக்கொண்டனர். இதனையடுத்து அலிகரைச் சேர்ந்த தாய் ஒருவர், இது காணாமல் போன தனது மகள் 24 வயது வாரிஷா என்று அடையாளம் காட்டினார். மேலும், தனது மகளை அவளது மாமியாரும் கணவரும்தான் கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டதாக புகார் அளித்ததன் அடிப்படையில், கணவரும் மாமியாரும் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையை கண்டுபிடித்தத்தற்காக காசியாபாத் காவலர் குழுவிற்கு 15 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.

 


Advertisement

image

 

இந்நிலையில்தான், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வாரிஷா உயிருடன் திரும்பி வந்துள்ளார். அதிர்ந்துபோன காவலர்கள் விசாரித்ததில் மாமியார் துன்புறுத்தியதால் கடந்த ஜூலை 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரைக் கொடுமைப்படுத்தியதற்காக இன்னும் கணவரும் மாமியாரும் சிறையில்தான் இருக்கிறார்கள். இப்போதுவரை சூட்கேஸில் இருந்த பெண் யார் என்பது காசியாபாத் காவலர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தவறான உடலை காட்டியதற்காக வாரிஷாவின் தாய் மற்றும் சகோதரர்மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement