கொரோனா பாதிப்பை சிறப்பாக கட்டுப்படுத்திய உலகின் இளம் பெண் பிரதமர் திருமணம்!

The-worlds-youngest-female-Prime-Minister-who-ended-up-marrying-her-boyfriend-after-having-a-baby-at-the-age-of-two-and-a-half

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகின் மிக இளம் வயது பிரதமரான சன்னா மரின் தனது 16 ஆண்டு கால காதலரை மணந்து வாழ்த்துகளைக் பெற்று வருகிறார். ஆகஸ்ட் ஞாயிறு அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நாங்கள் எங்கள் இளமையில் ஒன்றாக வாழ்ந்தோம். ஒன்றாக வளர்ந்து அன்பு மகளுக்கு பெற்றோராகிவிட்டோம். நான் விரும்பும் மனிதனுடன் என் வாழ்க்கையை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என்றுக்கூறி இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துகொண்டார்.


Advertisement

image

இந்தத் திருமணம் பின்லாந்து பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லமான கேசரந்தாவில் நடைபெற்றது. இதில், மிக முக்கியமான விஷயம் என்றால், இவர்களுக்கு இரண்டரை வயதில் எம்மா அமலியா மரின் என்ற பெண் குழந்தை இருக்கிறது. ஆனால், இப்போதுதான் திருமணம் செய்துள்ளனர். இத்திருமணத்தில் 40 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இவரது கணவர் மார்கஸ் ரெய்கோனன் பின்லாந்து நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருமணத்தை பின்லாந்து அரசும் ட்வீட் செய்துள்ளது.


Advertisement

image

கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த சன்னா மரினுக்கு இப்போது 34 வயதாகிறது. உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமை இவரையேச் சாரும். (இவருக்கு முன்பு 37 வயதாகும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இப்பெருமையை தக்க வைத்திருந்தார்) ஐந்து கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சி நடத்துபவர்.

image


Advertisement

சமீபத்தில் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய பெண் பிரதமர்கள் ஆளும் நாடுகளின் பட்டியலில் சன்னா மரினும் ஒருவர் என்பது குறிப்பித்தக்கது. காரணம், அங்கு மொத்த கொரோனா எண்ணிக்கையே 7.400 தான். சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக உள்ள சன்னா, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தகவல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக 2019 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். பின்னர், அதே ஆண்டில் டிசம்பர் 8 ஆம் தேதிமுதல் பிரதமராக இருந்து வருகிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement