[X] Close >

புதுச்சேரி : வீட்டு உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை

man-killed-his-house-owner-due-to-water-issue-in-puducherry

புதுச்சேரியில் வீட்டு உரிமையாளரை வாடகைக்கு இருந்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது வீட்டில் அருண் என்பவர் வாடகைக்கு தங்கி இருந்தார். இந்நிலையில் புருசோத்தமனுக்கும் அருணுக்கும் தண்ணீர் திறந்து விடுவதில் தகராறு இருந்து வந்துள்ளது.

மனைவி கணவனை கொலை செய்தால், அது கொலை ...


Advertisement

அதேபோல், நேற்றும் தண்ணீர் திறந்து விடவில்லை என்பது குறித்து வீட்டின் உரிமையாளர் புருசோத்தம்மனிடம் அருண் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அருண், புருசோத்தமனை கத்தியால் குத்தினார். இதில், புருசோத்தமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அருணை தேடி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close