கல்லூரி மாணவர்கள் மின்னல் வேகத்தில் ஓட்டிய கார் : தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Advertisement

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர், கொடுவாயில் என்ற இடத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பொல்லிகாபாளையம் என்ற இடத்தி‌ல் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

image


Advertisement

இந்த விபத்தில் வந்த இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் சாமிநாதன் மற்றும் ரத்தினம் தூக்கிவீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 5 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சுபாஷ் என்ற மாணவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

image

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வு செய்தார். கல்லூரி மாணவர் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கான காரணம் என அறிந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகளும் வெளியாகியுள்ளது. அதிலும், கல்லூரி மாணவர்கள் மின்னல் வேகத்தில் வந்து தம்பதி மீது மோதியது தெரியவந்துள்ளது.


Advertisement

‘சட்டை பை’ பணத்திற்காக நடந்த கொடூரம் : 17 வயது சிறுவனின் இரக்கமற்ற செயல்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement