‘சட்டை பை’ பணத்திற்காக நடந்த கொடூரம் : 17 வயது சிறுவனின் இரக்கமற்ற செயல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூரில் குடிபோதையில் இருந்தவரின் சட்டை பையில் இருந்த பணத்தை திருடிய சிறுவன், அவரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கொழுமம் அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆண் சடலம் ஒன்று ரத்த வெள்ளத்தில் கிடந்தது. பள்ளி தலைமையாசிரியர் குழந்தைகளுக்கு வழங்கவுள்ள பாடப்புத்தகங்களை சரி பார்க்க சென்றபோது, கழிப்பிடம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அருகிலுள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ரகுபதி, குமரலிங்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

image


Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இறந்த நபர் மதுரையைச் சேர்ந்த கணேசன் (56) என தெரியவந்தது. அவர் குடிபோதையில் பள்ளி வளாக மாடியின் மேல் ஏறியபோது கீழே விழுந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும் அவரது மரணம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த கணேசனுடன் கடைசியாக சிவா என்ற 17 வயது சிறுவன் உடன் சென்றது தெரியவந்தது.

image

இதையடுத்து சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர்கள் இருவரும் அரசுப்பள்ளி மேல் மாடியில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். கணேசன் போதையில் இருந்தபோது, அவரின் சட்டைப்பையில் இருந்த பணத்தை சிறுவன் திருடியுள்ளார். பின்னர் மேல்மாடியில் இருந்து கணேசனை கீழே தள்ளி விட்டு கொன்றுள்ளார். அவர் இறந்ததும் உடலை பள்ளி கழிவறை அருகில் கொண்டு போய் மறைத்தது வைத்துள்ளார்.


Advertisement

image

இதையடுத்து கொழுமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சிவா கைது செய்த போலீசார், அவர் மீது கொலை, கொலை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவன் என்பதால் திருப்பூர் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார்.

இலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா ? : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement