திடீரென வானில் சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து வானவில் தோன்றிய நிகழ்வு ராமேஸ்வரம் தீவு மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. புயல் வருவதற்கு அறிகுறியாக வானில் இவ்வாறு தோன்றியுள்ளதாக வயது முதிர்ந்த பெரியவர்கள்; தெரிவித்தனர்.
இன்று மதியம் சுமார் 1.45 மணிக்கு திடீரென சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து இருப்பது போன்ற ஒளிவட்டதுடன் வானவில் தோன்றியது. இது ராமேஸ்வரம் பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியது. வானில் தோன்றிய இந்நிகழ்வை ராமநாதபுரம் உட்பட பல இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக சூரியனை சுற்றி இந்த ஒளிவட்டம் தோன்றியது. வானவில் போன்று அழகாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் பலரும் தங்களது செல்போனில் சூரிய ஒளி வட்டத்தை படம் பிடித்தனர். இன்னும் சிலர் சூரியனை சுற்றியுள்ள வானவிலுடன் செல்பி எடுத்தது கொண்டனர்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நிகழ்வுகளை சாதாரணமாக நம்மால் பார்க்க இயலாது. அதே போல் கிரகணத்தை நம்மால் நேரடியாக கண்ணால் பார்க்க முடியாது ஆனால், இந்த வட்டத்தின் அளவு மிகவும் அகலமாக இருந்ததால் மக்களால் நேரடியாக கண்களால் பார்க்க முடிந்தது.
இந்த மாதிரியான ஒளிவட்டம் தோன்றியதற்கான காரணம் அறிவியில் ரீதியாக தெரியவில்லை. ஆனால், வயது மூத்தோர் சிலர் 1964ஆம் ஆண்டு தனுஸ்கோடியில் ஏற்பட்ட புயலுக்கு முன் வானில் இப்படி தோன்றியதாக கூறுகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புயல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக தோன்றிய இந்த வட்டவடிவ வானவில் பின்னர் சிறிது சிறிதாக வட்டம் விரிவடைந்த பின் மறைந்தது. இந்நிகழ்வு பொது மக்களளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!