கொரோனா நெருக்கடி காலத்தில் இலங்கை தேர்தல்: எப்படி நடக்கிறது தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா நெருக்கடிகளையும் தாண்டி இலங்கையில் ஆகஸ்டு 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை. கொரோனா காரணமாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இலங்கை தேர்தல் ஆணையம்.


Advertisement

image

ஏற்கனவே ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் தற்போது நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பொது சுகாதார அபாயமாக மாறுவதைத் தடுக்க, இலங்கை தேர்தல் ஆணையம் மற்றும் இலங்கை அரசாங்கம் பல சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, அதன்படி வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையை ஐந்து பேருக்குள் இருக்க வேண்டும். 300 பேர் மட்டுமே பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். கட்சித் தலைவர் கலந்து கொண்டால் அக்கூட்டத்தில் 500 பேர் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு மீட்டர் தூரம் சமூக இடைவெளி இருக்கவேண்டும்.


Advertisement

அனைவரும் கை சுத்திகரிப்பான்கள், முகமூடிகள் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும். தனி நுழைவு வழி மற்றும் வெளியேறும் வழிகளை கொண்ட வாக்குச் சாவடிகளில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான நபர்களை அனுமதிக்கவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகளுக்கு பிபிஇ கிட்களை வழங்கவேண்டும் என்பது போன்ற பல பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றபட வேண்டும் என்றிவிக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

இந்த தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3,682 பேரும், சுயேட்சைகள் சார்பில் 3,800 பேருமாக மொத்தம் 7,482 பேர் போட்டியிடுகின்றனர்.  இலங்கையின் வாக்காளர் எண்ணிக்கை, ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 ஆகும். இந்த தேர்தலுக்காக 12 ஆயிரத்து 985 வாக்கு பதிவு மையங்களும், 71 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 


Advertisement

இலங்கையில் இதுவரை 2823 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளர், அவர்களில் 2514 பேர் குணமடைந்துவிட்டனர். 11 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement