உலகின் மிகசிறந்த உறவைக் கொண்டாடும் நாளான இன்று அக்ஷய்குமார் தனது புதிய படமான ‘ரக்ஷா பந்தன்’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஹிமாண்டி ஷர்மா எழுதி, ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தை தனது சகோதரி அல்காவுக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் ’அட்ரங்கி ராய்’ படத்தையும் எல் ராய்தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதுவரை தான் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் மிக விரைவாக முடிவெடுத்தது என அவர் கூறியுள்ளார். இந்த படம் பார்த்தவுடனே ஆழமாக இதயத்தைத் தொடும் கதையம்சம் கொண்டது. உலகின் மிக சிறந்த பந்தமான சகோதர சகோதரி பிணைப்புக்கும், என் சகோதரி அல்காவிற்கும் ’ரக்ஷா பந்தனை’ அர்ப்பணிக்கிறேன். இந்த சிறப்பான வாய்ப்பை கொடுத்த ஆனந்த எல் ராய்க்கு நன்றி என அக்ஷய் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு ராஜு என தான் அன்பாக அழைக்கும் அக்ஷய் பற்றி அவரது சகோதரி அல்கா கூறுகையில், தன் சகோதரர் தனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசை வெளிப்படுத்தினார். நைட் பார்ட்டிகளுக்கு செல்லவேண்டுமானால் பெற்றோர் ராஜுவிடம் கேடக்வேண்டும் என சொல்வார்கள். ஆனால் அவர் ஒருபோதும் என்னுடன் வரமாட்டார். உன்னை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறிவிடுவார். இதனால் நிறைய பார்ட்டிகளை தவற விட்டிருக்கிறேன் என கூறியிருந்தார்.
தனது தந்தை இறந்தபோது குடும்பப் பொறுப்புகளை அக்ஷய் எவ்வாறு பொறுப்பாக ஏற்றுக்கொண்டார் என்பது பற்றியும் அல்கா பேசியிருந்தார்.
மேலும் அல்காவின் மகள் சிமர் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அக்ஷய் கூறியதன் முக்கியத்துவத்தை தான் உணர்ந்துகொண்டதாக அவருக்கு நன்றி கூறியிருந்தார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை