“என்னுடைய மகளை பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்தி கொன்று விட்டனர்” - தாய் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கணவன் குடும்பத்தார் மீது பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த பால்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகள் திவ்யபாரதி. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சேட்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே திவ்யபாரதியை அவரது தாய் வீட்டில் இருந்து பணம், நகை வாங்கி வரும்படி கேட்டு அவரது கணவர் சேட்டு, அடித்து, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி! பிளஸ் 2 தேர்வு ...


Advertisement

இந்த நிலையில் திவ்யபாரதிக்கும், சேட்டுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனிடையே திவ்யபாரதி, தனது உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திவ்யபாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

image

இந்த நிலையில் திவ்யபாரதியின் தாய் நாகம்மாள், ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், என்னுடைய மகளை பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்தி கொன்று விட்டனர். எனது மகளின் மரணத்தில் மர்மம் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement