சென்னை போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் போன்றே, அதன் அருகில் பெரிய வீடு ஒன்றை சசிகலா கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் உள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் போயஸ் கார்டன் சாலையில் சசிகலா ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டப் போவதாகவும், கொரோனா பரவல் காரணமாக அப்பணியில் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் சசிகலா குடும்ப உறுப்பினர் ஒருவர் ஒரு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மூன்று மாடிக் கட்டடமான வேதா நிலையம் 24,000sqft பரப்பளவு கொண்ட நிலையில் அதை விட பெரிய அளவில் சசிகலா கட்டும் வீடானது இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிளாட் எண் 95/58 என்பதில் உள்ள இந்த இடமானது ஸ்ரீஹரிசந்தானா பிரைவேட் லிமிட் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் கட்டப்படும் வீடானது வேதா நிலையத்தைப் போன்றே மூன்று மாடி அடுக்குகள் கொண்ட வீடாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
Loading More post
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!