கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலர்ட்" எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு "ஆரஞ்சு அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் என திருவனந்தபுரம் வானிலை மையம் ஏற்கெனவே முன்னறிவிப்பு செய்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் அதி கன மழைக்கான சூழல் உருவாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இதேபோன்று ஆகஸ்ட் 4ஆம் தேதி கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் காசர்கோடு மாவடங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement