[X] Close

சென்னையில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை; 5 பேர் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் ஆன்லைன் வழியாக லாட்டரி விற்பனை செய்துவந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

தங்கம் லாட்டரி என்று கூறி சென்னையின் பல்வேறு இடங்களில், போலந்து அரசு பரிசுத் தொகை தருவதாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாகவும், சமூக வலைதளங்களிலும் சட்டவிரோதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் தெரியவந்தது.

மேலும், குறிப்பாக தாம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்களே மீண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தெரியவந்தது.


Advertisement

இதையடுத்து சென்னை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சாத்தாங்காடு கார்கில் நகரில்,  தனிப்படை போலீசார், ஆன்லைனில் லாட்டரி விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்த ராசி ரங்கா, முருகானந்தம், செல்வம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement