மாநிலங்கள் மீது எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது : ரமேஷ் பொக்ரியால்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அரசு மாநிலங்கள் மீது எந்த ஒரு மொழியையும் திணிக்காது என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசம் வெல்ல தேசியக் கல்விக்கொள்கை என பதிவிட்டிருந்தார். அத்துடன் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் உரையையும் பகிர்ந்திருந்தார்.

இந்த ட்வீட்டை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் முழு ஊரடங்கு: கொரோனா பாதிப்பு பேரிடராக அறிவிப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement