வெள்ளம் பாதித்த அசாம் மக்களுக்கு 20 லட்சம் சாப்பாடு: சமையல் நிபுணரின் தாராள மனசு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

இந்தியாவில் மழைக்காலம் தொடங்கினாலே, பீகாரில் வெள்ளம் என்பதுதான் செய்தியாக இருக்கும். அது இயற்கையின் வழக்கமான நடைமுறை. பீகார், அசாம் மாநிலங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார் சமையல் நிபுணர் விகாஷ் கன்னா.

இந்த மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 100 கிராமங்களில் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். மேலும், பின்தங்கிய கிராமங்களில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் சவாலான பணியாக இருப்பதாகவும் விகாஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.   


Advertisement

 

image

ஏற்கெனவே ஊரடங்கால் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் உதவிகள் செய்துள்ள விகாஷ், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதை நோக்கமாக வைத்து உதவிவருகிறார்.    


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement