பேண்டுக்குள் நுழைந்த பாம்பு... ஏழு மணிநேரம் அசையாமல் நின்ற நபர்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரத்தத்தை உறையவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தவரின் பேண்டுக்குள் ஊர்ந்து சென்றது நாகப்பாம்பு. பாம்பு பேண்டுக்குள் சென்றதை உணர்ந்த நபர் பாம்பை வெளியே எடுக்க ஏழுமணி நேரம் நின்று கொண்டே இருந்தார். அதிர்ஷ்டவசமாக பாம்பு அவரை கடிக்கவில்லை.


Advertisement

image
உத்திரபிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்கேஷ்குமார். மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை நிறுவுவதற்கான வேலை பார்த்து வந்த இவர், இரவு உணவை முடித்துக் கொண்டு சக தொழிலாளர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது பேண்ட் பகுதியில் ஒரு நாகப்பாம்பு புகுந்துவிட்டது. இதையறிந்தவர் உடனடியாக தனது பேண்டை பாதியளவு கழற்றிவிட்டு ஆடாமல் அசையாமல் அங்கே இருந்த தூணை பிடித்தபடி நின்றிருந்தார். இதையறிந்த சக ஊழியர்கள் மற்றும் உள்ளுர்வாசிகள் பாம்பு பிடிப்பவரை அழைக்கச் சென்றனர்.

 


Advertisement

image
சிறிது நேரத்தில் போலீசார் மற்றும் பாம்பு பிடிப்பவர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். அதன்பிறகு பாம்பு பிடிப்பவர், பேண்ட்டின் கால்பகுதியில் இருந்த பாம்பை பிடிக்க பேண்டின் கால்பகுதியை வெட்டினார். பாம்பு வெளியே வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பேண்டின் அடுத்த கால்பகுதிக்குள் சென்றுவிட்டது. 7 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பு வெளியே சென்றது. அதுவரை தூணை பிடித்தபடியே நின்றிருந்தார்; நல்லவேளையாக பாம்பு அவரை கடிக்கவில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement