நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், சுஷாந்தின் தந்தை விரும்பினால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பீகாரின் துணை முதல்வர் சுசில் மோடி, மகாராஷ்டிரா காவல்துறை சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது “ இந்த வழக்கு விசாரணையில் மகாராஷ்டிரா காவல்துறை பீகார் காவல்துறையுடன் ஒத்துழைக்கவேண்டும். ஏனென்றால் பீகாரிலுள்ள பாட்னா காவல்நிலையத்தில் தான் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இரு மாநில காவல்துறைக்கும் இடையே எந்த மோதலும், கருத்து வேறுபாடும் இல்லை. சுஷாந்தின் தந்தை விரும்பினால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஆனால் பீகாரின் பாஜக துணை முதல்வர் சுசில் மோடி “ மகாராஷ்டிராவின் சிவசேனா – காங்கிரஸ் அரசு, இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை வழக்கில் பல தடைகளை உருவாக்குகிறது” என்று கூறிவருகிறார்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!