வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழைப்பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நான்காம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தாழ்வு பகுதி உருவாவதின் காரணமாக வட இந்தியா மற்றும் தென் இந்தியாவின் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் மூன்றாம் தேதி முதல், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று மற்றும் நாளை மேற்குவங்கம் ,ஆந்திர பிரதேசம், குஜராத், ஒடிசா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம் கடலோரப் பகுதிகள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!