Advertisement

அமெரிக்கர்களிடம் சினிமா ஆசைக்காட்டி பண மோசடி செய்த இந்தியர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரத்தில் உள்ள 26 வயதாகும் சிவா சந்தன் ரெட்டி என்பவர் தன்னை சினிமா தயாரிப்பாளராகக் காட்டிக்கொண்டு ஒரு லட்சத்து அறுபதாயிரம் டாலர் மோசடி செய்து, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

டெக்சாஸில் உள்ள இர்விங்கை சேர்ந்த சிவா சந்தன் ரெட்டி கடந்த 2015 முதல் 2017 ஆம் ஆண்டுவரை கல்லூரியில் படித்துக்கொண்டிருர்ந்தார்.  படிக்கும்போது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு குடிமக்கள் பலரிடம் உறவுகளை ஏற்படுத்தி மோசடிகளை செய்துள்ளார். தான் திரைப்படங்களை தயாரித்து விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள வணிக முயற்சிகளின் லாபத்தில் பங்கெடுக்க முதலீட்டாளர்களைத் தேடுவதாக அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் பொய்யாகக் கூறினார்.


Advertisement

இப்படி பலரிடம் மோசடி செய்து சுருட்டிய பணத்தை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தியுள்ளார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவித்தபிறகே இந்தியாவிற்கு செல்ல முடியும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement