"தந்தையோட இறுதிச் சடங்கை செய்யணும்" நிறைவேற்றிய கொரோனா நோயாளியின் கோரிக்கை!!

Funeral-with-father--Physicians-who-fulfilled-the-request-of-the-corona-patient

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்ய மருத்துவர்கள் அனுமதித்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த 28 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைப் பெற்றிருந்த போது அவரது 50 வயதான தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்ய அனுமதிக்குமாறு மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

image


Advertisement

இதனையடுத்து மருத்துவர்கள் இளைஞனிடம் அவரது தந்தையின் இறப்புச் செய்தி குறித்து கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மனமுடைந்து மருத்துவர்களிடம் அழுதுள்ளார். அவரின் வேதனையைப் புரிந்து கொண்ட மருத்துவர்கள் அவருக்கு மன ரீதியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மனநல மருத்துவ அலுவலர் டாக்டர் தெய்வநாயகத்தை வரவழைத்து ஆலோசனை வழங்கச் செய்தனர். அப்போது அந்த இளைஞர் தனது தந்தைக்கான இறுதிச்சடங்குகளை செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து மனிதநேய அடிப்படையில் முறையான அனுமதி பெற்று இளைஞரை விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

image

இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் அவருக்கு முறையான பாதுகாப்பு கவச உடைகள் அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடிக்கு அழைத்து வந்தனர். வீட்டிற்குள் செல்லாமல் வாசலிலேயே தந்தைக்கான இறுதிச் சடங்குகளை இளைஞர் செய்தார். உறவினர்கள் அவர் அருகில் செல்லாமல் சுகாதாரத்துறையினர் பார்த்துக்கொண்டனர். பாதுகாப்பு கவச உடையுடன் தந்தைக்கு மகன் இறுதிக் காரியங்கள் செய்யும் காட்சியை பார்த்த  அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.


Advertisement

image

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயான கரைக்குச் அழைத்து வரப்பட்ட அந்த இளைஞர் அங்கு தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதன் பின்னர் மீண்டும் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement