ஆந்திராவில் ஒரே நாளில் 9 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

image


Advertisement

அதன்படி, ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,209 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 58 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,407 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 76,614 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 73,188 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement