தினமும் தரையைப் பெருக்குகின்ற போதே சுவர்களின் இணைப்பு பகுதியில் ஒட்டடை அடித்தால் சிலந்தி வலைகள் ஆக்கிரமிப்பது தடுக்கப்படும்.
தரையை துடைக்கும்போதே வீட்டில் உள்ள மர ஃபர்னிச்சர்களையும் மெல்லிய துணியால் துடைக்கலாம்.
சமையல் அறைக்குள் தேவையற்ற பொருட்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
படுக்கை அறையை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் உடல் ஆரோக்யம் மேம்படும். அங்கு தூசுகள், அழுக்குகள் படர்வது சுவாசக் கோளாறு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். படுக்கையில் இருந்து எழுந்தவுடன் போர்வைகளை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது படுக்கை அறையை தூய்மைப்படுத்துவது அவசியம்.
வீட்டின் தரையை அழகாக பராமரிக்க
தரையில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை, ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத் துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.
எண்ணெய் பிசுக்கு நீக்க
சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி பளிச் என பளபளக்கும்.
கரைகளை விட சிராய்ப்புகள் பர்னிச்சர்களின் அழகை அதிகமாக சிதைக்கிறது. முட்டை மஞ்சள் கருவுடன் சிறிது வினிகர் சேர்த்து பசை போல் ஆக்கி சிராய்ப்பில் பூசிவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு துடைத்து விடுங்கள் சிராய்ப்பு மறைந்து விடும். முட்டைக்கு பதில் மெழுகையும் தேய்க்கலாம்.
சமையலறை பராமரிப்பு
அடுப்புமேடை மற்றும் பாத்திரம் தேய்க்கும் தொட்டியை நன்றாக துடையுங்கள். தினம் தரையையும், வாரம் ஒருமுறை சமையலறை ஜன்னல்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வரவேற்பறை
இடம் குறுகலாக இருந்தாலும் அகலமாகக் காட்டும் திறன் கண்ணாடிகளுக்கு உண்டு. வரவேற்பறையின் மத்தியில் டீப்பாய் வைத்து அலங்கரிப்பது வழக்கம். அந்த டீப்பாய் மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் கண்ணாடி டீப்பாயாக இருந்தால் உங்கள் வரவேற்பறை விஸ்தாரமாகக் காட்சி அளிக்கும்.
வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட
கொசு : நான்கைந்து பூண்டு விழுதுகளை எடுத்து நசுக்கி, வெந்நீரில் காய்ச்சி, அந்த நீரை வீடு முழுக்க தெளித்தால் கொசுத் தொல்லை இருக்காது.
எறும்பு : எறும்புப் புற்று மற்றும் எறும்புகள் செல்லும் தடத்தில் வெள்ளை வினிகரை தெளித்தால் எறும்புகள் வராது.
கரப்பான்பூச்சி : கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால், கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.
ஈ : வீட்டின் ஒவ்வொரு மூலையிலும், ஒரு கிண்ணத்தில் கற்பூரங்களை போட்டு வைத்துவிட்டால், ஈக்களின் தொல்லையே இருக்காது.
பொருட்கள் பளிச்சென்று மின்ன
துருப்பிடித்த பொருட்கள்: இரும்பு பொருட்களில் உள்ள துருவை நீக்க உருளைக்கிழங்கை கொண்டு துருப்பிடித்த இடங்களில் தேய்த்தால் துரு நீங்கி விடும்.
பாத்திரங்கள் : வாணலியில் உள்ள கருமையை எந்த ஒரு கீறல்கள் இல்லாமல் போக்க, காபித் தூளைப் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.
ஜன்னல்கள் : ஜன்னல்களை வெங்காயத்தைக் கொண்டு துடைத்து எடுத்தால், ஜன்னல்களில் உள்ள எண்ணெய் பசை போன்ற தூசிகள் மற்றும் கறைகள் நீங்கிவிடும்.
பாத்திரம் கழுவும் தொட்டி : பாத்திரம் கழுவும் தொட்டியில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, தொட்டி பளிச்சென்று இருக்க வேண்டுமானால், எலுமிச்சையைக் கொண்டு தேய்க்க வேண்டும்.
கப்: கப்களில் உள்ள நீங்கா கறைகளை போக்க, வெள்ளை வினிகர் கொண்டு தேய்த்தால், கப்களில் உள்ள செராமிக் போகாமல், கறைகள் மட்டும் நீங்கும்.
ஃபிரிட்ஜ்: ஃபிரிட்ஜில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க, க்ரீன் டீயின் இலைகளை ஒரு பௌலில் போட்டு, அதனை ஃபிரிட்ஜில் வைத்தால், துர்நாற்றம் போய்விடும். இதே போல் எலுமிச்சை பழத்தை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்தாலும் துர்நாற்றம் வராது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்: ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை வெள்ளரிக்காய் கொண்டு தேய்த்தால், அந்த பாத்திரங்கள் பொலிவோடு மின்னும்.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி