ஊரடங்கால் குடும்பத்தின் வறுமை சூழலை உணர்ந்து பனையேறும் தொழில் செய்து வருகிறார் 11-ஆம் வகுப்பு முடித்துள்ள தூத்துக்குடி மாணவர்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது அரசர்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் கோசலை தம்பதி, கூலி வேலை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் வருவாய் இழப்பை சந்தித்துள்ள தங்கள் குடும்பத்தின் நிலையை அறிந்து, பாலகிருஷ்ணனின் மகன் கிருஷ்ண பெருமாள் பனையேறும் தொழில் செய்து வருவது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பதினொன்றாம் வகுப்பு முடித்துள்ள இவர் பனைப் பொருட்களுக்கு உள்ள வரவேற்பு காரணமாகவே பனைத் தொழில் செய்யத் தொடங்கி உள்ளதாக கூறுகிறார்.
தினமும் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு விடும் கிருஷ்ண பெருமாளுக்கு, அவரது தங்கை கண்ணகி உதவியாக இருக்கிறார். தங்கள் குடும்பத்தின் சூழலை உணர்ந்த இருவரும், பதநீரை இறக்கி, பத்திரமாக காய்ச்சி, பக்குவப்படுத்தி, கருப்பட்டியாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை இந்த தொழில் செய்வதன் மூலமும் சமாளிக்க முடிவதாக கூறுகிறார் எட்டாவது வகுப்பு முடித்துள்ள சிறுமி கண்ணகி.
பல்வேறு காரணங்களால் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த தொழிலை கைவிட்டதாக கூறும் கிருஷ்ண பெருமாளின் தாயார் பனைத் தொழிலை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறார்
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தின் நிலையை அறிந்து கிடைக்கும் நேரத்தை பனையேறும் தொழில் செய்வதற்கு பயன்படுத்தி வரும் ஏழை மாணவனின் செயல், காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கிறது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்