ரம்புட்டான் விளைச்சல் இருந்தும் விலை இல்லை: குற்றாலத்தில் விவசாயிகள் புலம்பல்!

Courtallam-farmers-worried-No-price-from-rambutan-yields
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், கண்ணுப்புளிமெட்டு ஆகிய பகுதிகளில் ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன் உள்ளிட்ட பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன. மலைப்பாங்கான பகுதிகளில் மட்டுமே விளையும் இப்பழங்கள், ஜூன் மாத இறுதியில் அறுவடை செய்யப்பட்டு, குற்றால சீசன் காலத்தில் மட்டும் இங்கு விற்பனைக்கு வரும்.
 
ரம்புட்டான் பழங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்களில் காய்க்கும். ரப்பர் போன்ற மிருதுவான முள்களுடன் தோற்றமளிக்கும் ரம்புட்டான் பழங்களை லேசாக விரல்களால் அழுத்தி உடைத்தால் உள்ளே விதையுடன் முட்டை போன்று இருக்கும் சதைப்பகுதியை உண்ணலாம். லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கும்.
 
imageஅதேபோல் மங்குஸ்தான், துரியன் பழங்களும் தனிச்சுவை கொண்டவை. குற்றாலத்தில் சீசன் காலத்தில் இப்பழங்களின் விற்பனை அமோகமாக இருக்கும். பத்தில் ஐந்து கடைகள் பழக் கடைகளாகதான் அணிவகுத்து நிற்கும்.
 
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீசன் துவங்கியும் ரசிக்க சுற்றுலா வாசிகள் இல்லாமல் குற்றாலம் களையிழந்து காட்சியளிக்கிறது.
 
இதனால் ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன் பழங்கள் விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு வாய்ப்பில்லாததால் தோட்டங்களிலேயே விடப்பட்டுள்ளன. மேலும் பறித்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பழங்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
 
இதுகுறித்து கண்ணுப்புளிமெட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி கணபதி கூறும்போது, ‘’வழக்கமாக ஒரு கிலோ ரம்புட்டான் பழம் ரூ.200க்கு விற்கப்படும். இப்போது 100 ரூபாய்க்குதான் விற்கிறோம். இது பராமரிப்புச் செலவுகளோடு ஒப்பிடுகையில் பெருத்த நஷ்டம்தான்’’ என்கிறார் அவர்.
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement