[X] Close

பக்ரீத் நாளில் நாடு திரும்ப இந்தியர்களுக்கு உதவி... ஹஜ் பணத்தைக் கொடுத்த கேரள சகோதரர்கள்

Subscribe
Kerala-brothers-donate-Haj-money-to-help-stranded-indians-to--fly-home-for-Eid

அரபு அமீரகத்தில் உள்ள ஓமனில் சிக்கித் தவித்த இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட எட்டு கேரள சகோதரர்கள் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ஹஜ் புனிதப் பயணத்திற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை எட்டு சகோதரர்களும், இந்தியர்கள் நாடு திரும்ப செலவிட்டுள்ளனர். அல்அய்ன் நகரத்தில் வசிக்கும் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த உடன்பிறப்புகள் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான அப்துமான் அப்துல்மஜித் முதலில் உதவும் திட்டத்தை  தம்  சகோதரர்களிடம் பகிர்ந்துகொண்டார். உடனே அவர்கள்  மறுப்பு ஏதும் சொல்லாமல் ஹஜ் புனிதப் பயணத்திற்கு வைத்திருந்த சேமிப்பை வாரிவழங்கினர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மஜித், அலி கரீம், சிஹாப், பஷீர், பைசல் மற்றும் சஹாபுதீன் ஆகிய அந்த சகோதரர்கள் அல்அய்ன் நகரத்தில் வெவ்வேறு வேலைகளில் உள்ளனர்.  


Advertisement

image

“எங்களுக்கு மற்றவர்களுக்கு உதவும் வலிமையை இறைவன் கொடுத்திருக்கிறார். நிச்சயமாக உதவிகள் செய்வோம். இறைவனின் நற்கருணையால் நாங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்துவருகிறோம்” என்கிறார் சகோதரர்களில் ஒருவரான அலி கரீம். கேரள முஸ்லிம் கல்ச்சர் சென்டர் மூலமாகவும் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவிவருகிறார்கள்.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close