சுஷாந்த் இறப்பை தீவிரமாக விசாரிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சுஷாந்த் சகோதரி வேண்டுகோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுஷாந்த் மரணம் தொடர்பான முழு வழக்கையும் உடனடியாக தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அவரின் சகோதரி ஸ்வேதா சிங், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்


Advertisement

எம்.எஸ். தோனி படம் மூலமாக பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைச் சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை
ஏற்படுத்தியது. இவரது தற்கொலைக்கு இந்தி சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்து சிலர் படவாய்ப்புகளை
தட்டிப்பறித்ததுமே காரணமாகக் கூறப்பட்டது.

image


Advertisement

இதனை தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு
மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் என சுஷாந்தின் மரணம் ஒரு மர்மமாகவே தொடரும் நிலையில் இந்த வழக்கை உடனடியாக
தீவிரமாக விசாரிக்க வேண்டுமென சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி. இந்த முழு வழக்கையும் உடனடியாக தீவிரமாக விசாரிக்க வேண்டும். எனக்கு இந்திய நீதித்துறை மீது நம்பிக்கையுள்ளது. என பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.


Advertisement

image

மேலும், சார் நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என் மனம் சொல்லிக்கொண்டே இருப்பதாகவும், நாங்கள் ஒரு எளிமையான குடும்பம்
எனவும் சில வேண்டுகோள்களையும் அவர் முன்வைத்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement