"திரும்ப என்னை சேர்த்துக்கோங்க" பிசிசிஐக்கு சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிசிசிஐயின் வர்ணனையாளர்கள் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

image

பல ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு வந்த சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக பிசிசிஐயின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

image

அதில் "நான் பிசிசிஐயின் விதிப்படி நடந்துக்கொள்கிறேன். இனிமேல் ஒருபோதும் விதிகளை மீறமாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி" என தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் தொடர்பான இறுதி முடிவை சவுரவ் கங்குலி விரைவில் எடுப்பார் என கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement