பாலியல் தொல்லை - கணவரை உயிர் தளத்தில் அடித்து கொன்ற மனைவி ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கணவர் கொல்லப்பட்டச் சம்பவம் நிகழ்ந்துள்ளது


Advertisement

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச் சேர்ந்த இளங்கோ என்பவரது மகன் சுந்தர் என்ற சுதீர் (34). இவருடைய மனைவி அருள்செல்வி. இவர்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். மனைவி அருள்செல்வி திருமங்கலம் அருகேயுள்ள கீழ்செம்பட்டி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

image


Advertisement

சுந்தர் அடிக்கடி மது அருந்தி வருவதால் தொடர்ந்து குடும்பத் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கட்டிலில் இருந்து கீழே மயங்கி விழுந்ததாக கூறி சுந்தரை குடும்பத்தினர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரது உயிர் தளத்தில் ரத்தம் இருப்பதாகக் கூறி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

image

அதனடிப்படையில் திருமங்கலம் டிஎஸ்பி அருண் தலைமையிலான காவல்துறையினர் அருள்செல்வியிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கணவர் அடிக்கடி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால் மனைவியே அவரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement