இன்று வெளியான வித்யா பாலனின் சகுந்தலா தேவி படம் எப்படி இருக்கிறது? ரசிகையின் கருத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’மனிதக் கம்ப்யூட்டர்’ என்று அழைக்கப்படும் பெங்களூரைச் சேர்ந்த கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்றுப் படமான “சகுந்தலா தேவி” வித்யாபாலன் நடிப்பின் இன்று ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.


Advertisement

image

இந்தியாவில் சில காலங்களாகவே வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிப்பது ட்ரெண்ட் ஆகிக்கொண்டு வருகிறது. விளையாட்டு வீரர்கள் மேரி கோம், தோனி, கர்ணம் மல்லேஸ்வரி, நடிகை சாவித்ரி, அரசியல்வாதி ஜெயலலிதா, மோடி வரிசையில் இப்போது சகுந்தலா தேவியும் இணைந்திருக்கிறார். அவரது கேட்டப்பிலேயே நடித்து அசத்தியுள்ளார் நடிகை வித்யாபாலன். இன்று வெளியான இப்படத்திற்கு ஊடகங்கள் 3/5 மதிப்பெண்கள் போட்டு வரவேற்றுள்ளன. சமூக வலைதளத்திலும் ரசிகர்கள் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தை பார்த்த சென்னையைச் சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர், வைஷாலி நம்மிடம்,


Advertisement

image

வைஷாலி

” கொரோனா சூழலில் புதுப்படங்கள் எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருப்பதாக உள்ளது. அப்படித்தான், இன்று வெளியான சகுந்தலா தேவி படத்தையும் பார்த்தேன். இந்தியில்தான் வெளிவந்துள்ளது. வித்யாபாலன் நடிப்பு ஆசம் சொல்ல வைக்கிறது. வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அச்சு பிசகாமல் எடுத்துள்ளனர். பெண்கள் வாழ்க்கை, இந்த 2020 ஆம் ஆண்டிலும் கடினமாகத்தான் உள்ளது. ஆனால், அந்தக் காலத்தில் எப்படியிருந்திருக்கும்? அதனையெல்லாம் கடந்துதான், தன்னை ஒரு மனித கம்ப்யூட்டர் என்று வெளிநாடுகளில் நிரூபித்திருக்கிறார்.


Advertisement

திறமை இருந்தால் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என்று, இப்படம் பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. அதுவும் குழந்தைப் பிறந்ததும், அதனால் வீட்டில் முடங்கிவிடாமல் மீண்டும் தொழிலை தொடர வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார் சகுந்தலா தேவி. பொதுவாக வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றாலே,கொஞ்சம் போர் அடிக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எதுவுமே இல்லை. அதுவும், ஆண்கள் தன்னை ஏமாற்றினாலும் திறமையான பெண்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு சாதிப்பார்கள் என்பதை சொல்லுவது மிகவும் பிடித்திருக்கிறது” என்று சிலிர்ப்புடன் பேசுகிறார், வைஷாலி.

loading...

Advertisement

Advertisement

Advertisement