33 ஆண்டுகளுக்குப்பிறகு 10 ஆம் வகுப்பில் பாஸ் செய்த மனிதர்! கொரோனாவால் அடித்த ஜாக்பாட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எல்லோரும் கொரோனா பேரிடரில் சிக்கித்தவிக்கும்போது ஆந்திராவைச் சேர்ந்த முகமது நூருதீன் மட்டும் மகிழ்ச்சியில் இருக்கிறார். காரணம், 33 வருடங்களாக எழுதிவந்த 10 ஆம் வகுப்புத் தேர்வில் இப்போதுதான் பாஸ் செய்துள்ளார். கொரோனா சூழல் அவருக்கு சாதகமாகியிருக்கிறது. எப்படியென்றால், கொரோனாவால் இந்தியாவிலுள்ள் பல மாநிலங்கள் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது மட்டுமல்ல: தேர்வு எழுதிய மாநிலங்களில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில்தான் முகமது நூருதீன் தேர்ச்சிப் பெற்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துக்கொண்டிருக்கிறார்.


Advertisement

image

ஹைதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் உள்ள அஞ்சுமான் பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றிவரும் முகமது நூருதீன் கடந்த 1987 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். அதில், ஆங்கில பாடத்தில் தோல்வியடைந்தவர், தொடர்ச்சியாக வருடம்தோறும் எழுதிவந்தார். ஆனால், இங்கிலிஷ் அவருக்கு இனிக்கவில்லை.


Advertisement

10 ஆம் வகுப்பு பாஸ் செய்தாலாவது போட்டித் தேர்வுகளின் மூலம் அரசு வேலைக்குச் செல்லலாம் என்றிருந்தவருக்கு கடந்த 33 ஆண்டுகளாக தோல்வி மட்டுமே மிஞ்சியது. தற்போது, கொரோனாவால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் எல்லோருமே தேர்ச்சி என்று அறிவித்துள்ளதால் முகமது நூருதீன் பாஸ் ஆகிவிட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement