"அன்னை மொழியை காப்போம்..,” புதிய கல்விக் கொள்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Advertisement

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

image


Advertisement

மேலும் " தாய் மொழி கல்வி 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன். இந்த வரையறையை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.ஒருங்கிணைந்த பி.எட் கல்வி, வெளிப்படையான ஆசிரியர்கள் நியமனம் போன்ற அறிவிப்புகளுக்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும்" என கூறியுள்ளார்.

"அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம்" என்ற தேமுதிகவின் கொள்கையின்படி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என தனது அறிக்கையில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement