மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகன விபத்தால் உயிரிழந்த காவலருக்கு கொரோனா இருப்பதாக கூறி மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய மறுத்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகன விபத்தில் காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இறந்த காவலருக்கு கொரோனா நோய்தொற்று இருப்பதாக கூறிய உடலை உடற்கூறு மையத்தில் வைக்க மறுத்த அரசு மருத்துவர்கள், 7 மணி நேரமாக உடற்கூறு மையத்திற்கு வெளியே வைத்திருந்ததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனி மகன் செல்வம் இவருக்கு பாக்கியம் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். செல்வம் சிலைமான் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்றபோது திருமங்கலம் சுங்கச்சாவடி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஒருவார காலம் சிகிச்சையில் இருந்தவர் குணமாகி வீடுக்குச் சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காவலர் செல்வத்திற்கு கொரோனா நோய்தொற்று இருப்பதாக கூறி உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல் மருத்துவமனை வளாகத்திலேயே வைத்துவிட்டனர்.
ஏழுமணி நேரமாக பிரேத பரிசோதனை செய்யாமல் உடல் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என தெரிவித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
திருமங்கலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவரிடம் வலியுறுத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!