உழும் போது டிராக்டரில் ஏற முயன்ற சிறுவன் - ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மணப்பாறை அருகே உள்ள பண்ணை தோட்டத்தில் நிலம் உழும் பணியில் இருந்த டிராக்டர் கலப்பையில் சிக்கி 10 வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். 


Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைக்கண்ணு. இவர் அதேப் பகுதியில் உள்ள தனியார் பண்ணைத் தோட்டத்தில் இரவு பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணிக்காக பண்ணை தோட்டத்திற்குச் சென்ற துரைக் கண்ணு அவரது 15 வயது இளைய மகன் மூவேந்திரன் (எ) சிவாவையும் அழைத்துச் சென்றுள்ளார்.

image


Advertisement

காலை வேளையில் டிராக்டர் மூலம் நிலம் உழும் பணி நடந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்குச் சுற்றித்திருந்தச் சிறுவன் டிராக்டரின் மேலே ஏற முயற்சித்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக கலப்பையில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தச் சிறுவனைத் தேடிய போது, சிறுவன் ரத்தவெள்ளத்தில் நிலத்தில் கிடந்தது தெரியவந்தது.

image

இதனையடுத்து சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement