மும்பை நகரத்தின் மக்கள் நடமாட்டம் மிகுந்த நடைபாதையில் வசிக்கும் பெண் ஆஷ்மா ஷேக், மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய போட்டித் தேர்வில் வென்று சாதித்துள்ளார்.
டோங்க்ரி பகுதியில் உள்ள லால்ஜிபாய் சாஜன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஆஷ்மாவின் தந்தை எலுமிச்சை ஜூஸ் விற்பனை செய்பவர். ஆஷ்மா மற்றும் அவளது சகோதரனையும் நன்றாக படிக்கவைக்க அவர் கடுமையாக உழைத்துவருகிறார்.
மும்பை துறைமுகம் அருகேயுள்ள ஆஸாத் மைதானத்தில் உள்ள நடைபாதையில்தான் ஆஷ்மாவின் குடும்பம் வசித்துவருகிறது. அங்கே உள்ள தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, வார்த்தைகளில் விவரிக்கமுடியாத சிரமங்களைக் கடந்து எஸ்எஸ்சி போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் பதினேழு வயதான ஆஷ்மா.
“தினமும் போக்குவரத்து சத்தத்தால் பகலில் என்னால் படிக்கமுடியாது. இரவில்தான் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிப்பேன். எங்களுக்கு டியூசன் கட்டணம் கட்ட அப்பா ரொம்பவும் சிரமப்படுவார். இன்னும் டியூசன் ஆசிரியருக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டியுள்ளது. அப்பாவுக்கும் ஊரடங்கு நாட்களில் வருமானமும் குறைந்துவிட்டது” என்று உருக்கமாகப் பேசுகிறார் ஆஷ்மா.
ஆஷ்மாவுக்கு தொடர்ந்து படிக்கவேண்டும் என்று ஆசை. எதிர்காலத்தில் பத்திரிகையாளராக மாறவேண்டும் என்பதுதான் அவரது இலட்சியமாக இருக்கிறது.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!