ஆவடி: குழந்தையுடன் தாய் தற்கொலை -6 நாட்களுக்கு பின் குழந்தை உடல் கண்டெடுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆவடி அருகே இளம்பெண் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் குழந்தையின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


Advertisement

ஆவடி அடுத்த சேக்காடு டி.ஆர்.ஆர் நகர்,  திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர், டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு, இளவரசி (5) நிகிதா (3), தபிதா (9மாதம்) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 25ஆம்  புவனேஸ்வரி, தபிதாவுடன் வீட்டில் இருந்து மாயமானார்.

image


Advertisement

இதனையடுத்து, அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இருந்த போதிலும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கடந்த 27 ஆம் தேதி காலை ஆவடி அடுத்த சேக்காடு ஏரியில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக ஆவடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சடலத்தை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது, ஏரியில் இறந்து கிடந்தது புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. மேலும், தீயணைப்பு வீரர்கள் அவரது 9 மாத பெண் குழந்தையும் ஏரியில் பல மணி நேரம் தேடினர். ஆனால், குழந்தை தபிதா உடல் கிடைக்கவில்லை.

image

பின்னர், போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு  செய்து குழந்தையை தேடி வந்தனர். அதன்படி இன்று அம்பத்தூர் துணை ஆணையர்,உதவி ஆணையர் மற்றும் ஆவடி காவல்துறை ட்ரான் கேமரா உதவியுடன் குழந்தை உடலை தேடிவந்தனர். இந்நிலையில் குழந்தை உடல் நீரில் மிதப்பது கண்டுபிடிக்க பட்டது. தீயணைப்பு துறையினர் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு வருகின்றனர்.


Advertisement

கடந்த 4மாதமாக ஊரடங்கால் பாலாஜிக்கு வேலை இல்லை. இதனால், புவனேஸ்வரி குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதனால், மனம் உடைந்த புவனேஸ்வரி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement