சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் மரணம் வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்திய வழக்கில் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

2012ம் ஆண்டு தனது வீட்டில் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த சிறுமியைப்பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கும், ஜெய்சங்கர் என்பவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2018ல் தீர்ப்பளித்திருந்தது.

கரோனா: தமிழகத்துக்கு அதிகமான நிதி ...


Advertisement

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார், ஜெய்சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement