கிருமிநாசினி கலக்கப்பட்டதா?: ஆந்திராவில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் உயிரிழப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திராவில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குரிசேடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த புதன் கிழமை இரவு கள்ளச்சாராயம் வாங்கி வந்து குடித்ததாக தெரிகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததால், அவர்களை அங்குள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

image


Advertisement

இதில் நேற்றிரவு 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிகிறது.

சாராயம் குடித்த இடத்தில் 20 கிருமி நாசினி டப்பாக்கள் இருப்பதால் கிருமி நாசினி கலந்து குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement