[X] Close >

இளமையில் முதுமையா? - இந்த பழக்கங்களைத் தவிர்த்திடுங்கள்!

Tips-to-stop-age-faster

 


Advertisement

தவறான உணவுப்பழக்கம்

மைதா மற்றும் கேக் போன்ற உணவுப்பொருட்களை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ளுதல், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் பல்வேறு நோய்கள் வர முக்கிய காரணமாக இருக்கிறது. இது தோற்றத்தை நேரடியாக பாதிக்கிறது. இது தோலில் சுருக்கம் வர முக்கிய காரணமாக அமைகிறது. ஒருமுறை சாப்பிட்டுவிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் உணவுகள் இவை. இது மனநிலையில் மாற்றத்தை தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.


Advertisement

தூக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது நல்ல தூக்கம். சரியான நேரத்தில் தூங்கி விழித்தல் அவசியம். ஒருநாளில் குறைந்தது 7 மணிநேரம் தூங்கவேண்டும். சரியான உறக்கம் இல்லாதபோது நாள்முழுதும் மனம் மற்றும் உடலில் உற்சாகம் இருக்காது. போதுமான உறக்கமே மூளை மற்றும் இதயத்தை சரியாக இயங்கவைத்து, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்கி, சமநிலையில் இருக்க உதவுகிறது. உதாரணத்திற்கு, தூங்கும்போது சுரக்கும் மெலட்டோனின் கேன்சரை குணமாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. வளர்சிதை மாற்ற ஹார்மோன்களும் உறக்கத்தின்போதுதான் உருவாகிறது. இது தசைகளை வலுப்படுத்தி, கட்டுக்கோப்பாக வைக்கிறது. 

image


Advertisement

எப்படித் தூங்குகிறோம்?

தலையணையில் முகத்தைப் புதைத்து தூங்கும் பழக்கம் கொண்டவரா? இது சீக்கிரத்தில் வயதான தோற்றத்தை உருவாக்கும் என்பதை மறக்கவேண்டாம். மேலும் முகத்தில் கட்டிகளையும் பருக்களையும் உருவாக்குகிறது. முகத்தில் சீரான ரத்த ஓட்டமும் இருக்காது. எனவே நேராகப் படுத்து உறங்குவது நல்லது.

அவசர டயட்

குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்க வேண்டும் என சிலர் ஆசைப்படுவார்கள். இதற்காக கடுமையான டயட் முறைகளைப் பின்பற்றுவார்கள். இது நல்லதல்ல. உடலில் உற்சாகத்தின் அளவைக் குறைத்து, கவனக்குறைவை உண்டாக்குவதோடு மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.  மேலும் எடைக்குறைவை உடல் ஏற்றுக்கொள்வதற்கு போதிய காலம் இல்லாததால் சரும சுருக்கத்துக்கும் காரணமாகிறது.

பாட்டில் / ஸ்ட்ராவைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்

சிலர் எப்போதும் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அடிக்கடி ஸ்ட்ராவைப் பயன்படுத்தும் பழக்கமும் இருக்கும். இதனால் வாயைச் சுற்றியுள்ள தோலானது எளிதில் சுருக்கமடையும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தவிர்க்க எப்போதும் தம்ளரைப் பயன்படுத்துவதே சிறந்தது.

image

காழ்ப்புணர்வை விட்டுவிடுங்கள்

தவறுகளைப் பிடித்துக்கொண்டு இருக்காமல் மன்னித்து மறந்துவிடுவது நல்லது. மற்றவர்களை மன்னிக்கும்போது உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக ஒரு அமைதி உண்டாகிறது. இது ரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது.

சன் ஸ்க்ரீன் லோஷனை மறக்கவேண்டாம்

வெளியே செல்லும்போது சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறு சன் ஸ்க்ரீன் லோஷனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். இது சருமம் வயதாவதை மூன்று மடங்கு குறைக்கிறது. மேலும் பல சரும பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாப்புக் கொடுக்கிறது.

கண்களைத் தேய்க்கவேண்டாம்!

சாதாரணமாகத்தான் தோன்றும் இது. கண்களை அடிக்கடித் தேய்ப்பதை தவிர்க்கவேண்டும். இதனால் கண்விழிகள் மஞ்சள் நிறமாவதோடு கண்களைச் சுற்றி வளையங்களும் சுருக்கங்களும் உண்டாகும். இதைத் தவிர்க்க, கண்கள் எரியும்போது இரண்டு க்ரீன் டீ பேக்குகளை வைத்தால் எரிச்சல் நீங்கி குளுமை கிடைக்கும்.

ஏஸி காற்று வேண்டாமே!

சுத்தமான இயற்கைக் காற்று கட்டாயம் தேவை. எப்போதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது ஏஸி காற்றை சுவாசிப்பது நலல்தல்ல. இது சருமத்தை வறண்டு போக செய்வதோடு, உடலில் வெப்பத்தையும் சமச்சீரற்ற முறையில் மாற்றுகிறது. 

image

ஆல்கஹால் ஆபத்து

அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும்போது மனநிலையில் மாற்றத்தை உருவாக்குவதோடு முக வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு போன்ற பிரச்னைகளையும் உண்டாக்கும்.

புகைபிடித்தல்

இது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. புகைபிடித்தல் உள்ளுறுப்புகள் சருமம், பற்கள் மற்றும் முடி என அனைத்திலும் மோசமான மாற்றத்தை உருவாக்கிவிடும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைத்து வயதான தோற்றத்தை உருவாக்கும். 

எல்லாவற்றிற்கும் மேலாக எவ்வளவு கடினமான வேலையில் இருந்தாலும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். காலையில் சிறிது நடைபயிற்சி, பிடித்த செயல்களில் ஈடுபடுதல் போன்றவை ஒருவரை எப்போதும் இளமையாகவும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும்.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close