பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - கோவை முதலிடம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


Advertisement

11 ஆம் வகுப்பு தேர்வில் 96.04 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97.49% மாணவிகளும் 94.38% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப்பள்ளிகள் 92.71%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.95%, மெட்ரிக் பள்ளிகள், 99.51%, இருபாலர் பள்ளிகள், 96.20%, பெண்கள் பள்ளிகள் 97.56%, ஆண்கள் பள்ளிகள் 91.77% தேர்ச்சி அடைந்துள்ளது.

image


Advertisement

அறிவியலில் 96.33%, வணிகவியலில் 96.28%, கலைப்பிரிவுகளில் 94.11%, தொழிற்பாடப்பிரிவுகள் 92.77%, இயற்பியலில் 96.68%, வேதியியலில் 99.95%, உயிரியியலில் 97.64%, கணிதத்தில் 98.56%, தாவரவியலில் 93.78%, விலங்கியலில் 94.53%, கணித அறிவியலில் 99.25%, வணிகவியலில் 96.44%, கணக்குப்பதிவியலில் 98.16% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டங்களில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 98.10% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் விருதுநகர் மாவட்டமும் மூன்றாவது இடத்தில் கரூரும் உள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement