மீஞ்சூரில் பெரியார் சிலை சேதம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக பொது செயலாளர் அன்பழகன், 2.5 அடி உயரமுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்தார். அந்த சிலையில், பெரியார் அணிந்துள்ள கண்ணாடி, மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரையடுத்து டிஎஸ்பி கந்தகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே இது தொடர்பாக மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் திமுகவினர் காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்ச் செய்ய சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக மீஞ்சூர் பேரூர் கழக திமுக செயலாளர் மோகன்ராஜ் என்பவர் மீது மீஞ்சூர் காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல், இருதரப்பு இடையே கலவரத்தை தூண்டுதல், ஊரடங்கு காலத்தில் ஒன்றுகூட அழைப்பு விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’