காட்டெருமை தாக்கிய நிறைமாத கர்ப்பிணி சிசுவுடன் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல் மாவட்டத்தில் காட்டெருமை தாக்கிய நிறைமாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை மூலையூர் கிராமத்தில் கடந்த ஜூலை 21ஆம் தேதி நிறைமாத கர்பிணி பெண் தோட்ட சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, புதரில் இருந்து திடீரென்று வெளியேறிய காட்டெருமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வயிற்றில் படுகாயம் ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை வெளியில் வந்ததாகவும், அவரை உடனடியாக பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து குழந்தையை வயிற்றினுள் செலுத்தி தையல் இட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ மனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர். அப்பெண்ணும், வயிற்றில் இருந்த நிறைமாத குழந்தையும் உயிருக்கு போராடிய நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் இறந்தனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பனை மரத்தில் ஏறியபோதே மாரடைப்பு : தொழிலாளி சறுக்கி இறந்த பரிதாபம்

loading...

Advertisement

Advertisement

Advertisement