“அண்ணா சிலைக்கு காவிக்கொடி போட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்” - காவல்துறை விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரே அண்ணா சிலையின் பீடக்கம்பியில் காவிக்கொடி போட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலையின் தடுப்பு வேலியில் மர்ம நபர்கள் காவிக்கொடி கட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து பத்மனாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குழித்துறையில் உள்ள அண்ணா சிலை பீடத்தின் கம்பிகளில் காவி துணியை போட்டது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. எந்த உள்நோக்கத்தோடும் இது நடைபெறவில்லை எனவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement