இன்று மாலை இங்கிலாந்து – அயர்லாந்து இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பகல் இரவு ஆட்டமாக நடக்கவுள்ள இந்த போட்டி இன்று மாலை தொடங்குகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நேரில் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.


Advertisement

image

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 10 ஒரு நாள் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இதில் 8 போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் அயர்லாந்தும் வெற்றி கண்டுள்ளது. மற்றொரு போட்டியில் முடிவு இல்லை. 2023 ஆம் ஆண்டு நடக்கவுள்ள  உலகக் கோப்பை  கிரிக்கெட்  போட்டிக்குரிய  தகுதி சுற்றான  சூப்பர் லீக்  இந்த  தொடரில்  இருந்து  கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதனால் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement