"கொரோனா நீடித்தால் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யோசிப்பேன்" டேவிட் வார்னர் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பிரச்னை நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள டேவிட் வார்னர் "எப்போது கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப் போகிறது. எத்தனை போட்டிகளில் விளையாட போகிறோம் என்பது பெரிய விஷயமல்ல. என்னை பொறுத்தவரை குடும்ப நலனே முதலில் முக்கியம். கொரோனா உயிர் மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் விளையாடுவதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதனால் குடும்பத்தை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்து இருக்க வேண்டியது வரும். எனவே தற்போதைய சூழ்நிலை நீடித்தால் எனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கலாம்" என்றார்.

image


Advertisement

மேலும் தொடர்ந்த வார்னர் " எனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கும் நான் நிறைய நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன். அவர்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். எப்போதும் உங்கள் குடும்பத்தை பார்த்துகொள்வதற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில் இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.

image

தொடர்ந்து பேசிய அவர் " இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிபோடப்பட்டுள்ளது. அந்தப் போட்டி இங்கு நடந்து இருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருந்து இருக்கலாம். அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தால் அங்கு செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரலாம்" என்றும் தெரிவித்துள்ளார் வார்னர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement